கனமழை மற்றும் வரத்து குறைவால் தமிழகத்தில் வெங்காய விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு தொடரும் பட்சத்தில் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வெங்காய விளைச்சல் பாதிப்பு
தமிழகத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சின்ன வெங்காயம் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது இதனால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
ரேஷனில் வெங்காயம்
இந்நிலையில், இந்த விலைஉயர் குறித்த பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான் என்றார். மேலும், வெங்காய அறுவடை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளதாகவும், இந்த விலை உயர்வு தொடரும் பட்சத்தில் நியாயவிலைக் கடைகளில் (Ration shop) வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க..
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22% சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை - அமைச்சர் காமராஜ்!
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கரில் இயற்கை தோட்டம் !!
குழாய் கிணறு, துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!