News

Wednesday, 25 August 2021 05:24 PM , by: R. Balakrishnan

Crop Loan Announcement

நடப்பு நிதியாண்டில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் (Crop Loan) வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிய கோரிக்கை

தமிழக சட்டப்பரேவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது விவசாயிகளுக்கான பயிர்கடன் குறித்த கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், கூட்டுறவு சங்கங்கள், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் 12 லட்சத்து, 37 ஆயிரத்து 448 விவசாயிகளுக்கு 9 ஆயிரத்து 504 கோடி in வழக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 330 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு 755 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், நடப்பு நிதியாண்டியில் ஜூலை 31ம் தேதி வரை 98 ஆயிரத்து 36 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 7,823 பட்டியலின பழங்குடியின விவசாயிகளுக்கு, ரூபாய் 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூபாய் 11,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

நாட்டின் மிக உயரமான மூலிகை தோட்டம்: உத்தரகாண்டில் திறப்பு!

காப்பீடு இல்லையென்றாலும் பயிர்களுக்கு இழப்பீடு: அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)