ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நீங்களும் ரேஷனை வாங்கிக் கொண்டு இருந்தால், இந்த புதிய விதிகளை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
புதிய உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன
அரசின் இலவச ரேஷன் வசதியை, தகுதியற்ற பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும், புதிய வழிமுறைகளை பின்பற்றாத பயனாளிகளின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெரிஃபிகேஷன் கட்டாயம் செய்ய வேண்டும்
மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் அனைவரும், அவர்களின் வெரிஃபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெரிஃபிகேஷனில் நீங்கள் தகுதியற்றவர் என கண்டறியப்பட்டால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
கோடிக்கணக்கான கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களின் கார்டுகளை அரசு வேகமாக ரத்து செய்து வருகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை சுமார் 2 கோடியே 41 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த கார்டுகளில் பெரும்பாலானவை உ.பி.யில் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 ரொக்கம்
இதற்கிடையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், ரொக்கமாக ரூ.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க: