தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவுப்பு விரைவில் வரவிருக்கிறது. பொதுவாக மாநில அரசின் எந்த ஒரு சலுகையையும் பெற விடுமானால் ரேஷன் கார்டு இன்றியமையாதது ஆகும். தற்போது இந்த ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாறியுள்ளது.
இதுவரை தமிழக அரசு ரேஷன் கார்டில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித நிபந்தனை இன்றி அனைத்து தரப்பினருக்கும் வழங்கி வந்தது. இதனால் வசதி படைத்தவர்கள் பலரும் ரேஷன் கார்டுகளை வைத்து மானிய விலையில் பொருட்களை வாங்கி வருவதாகவும், அரசின் சலுகைகளை பெற்று வருவதாக பல தரப்பினர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவு பிற்பித்துள்ளது.
அரசின் சலுகைகளை பெற தகுதியான ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே மானிய விலை சமையல் பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் பயன்பாட்டில் இருக்கும் போலி ரேஷன் கார்டுகள் முழுவதுமாக தடுக்கபடும்.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னுரிமை பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன்படி கீழ்காணும் அம்சங்களில் ஏதேனும் ஒன்றை வைத்திருந்தாலும் அரசு மானியம் வழங்க பட மாட்டாது.
- அனைத்து வகை ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டி பெறும் குடும்பங்கள்
- குடும்ப உறுப்பினர் யாரேனும் வருமான வரிச் செலுத்துவார்கள் எனில் சலுகைகள் வழங்க பட மாட்டாது.
- 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள்
- ஏசி மற்றும் கார் போன்ற ஆடம்பர பொருட்கள் வைத்திருப்பவர்கள்.
- மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குடும்பங்கள்
- 3 அல்லது அதற்கும் மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம்.
- வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம்.
மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறையின் கீழ் வரும் குடும்பங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் பெரும்பாலானோர்களின் சலுகைகள் ரத்து செய்ய உள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran