ஆவின் பால் விலை உயர்த்தப்பபட்டதை தொடர்ந்து, அதன் மூலம் தயாரிக்கப்படும் இதர பொருட்களான நெய், பனீர் போன்ற பொருட்களுக்கான விலையை உயர்த்தவுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது வரும் 18- ஆம் தேதி முதல் அமுலில் வர உள்ளது.
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் பால் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 19- ஆம் தேதி முதல் அனைத்து வகையான பாலுக்கும் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபட்டது. தொடர்ந்து நுகர்வோருக்கு தரமான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.
ஆவின் பால் நிறுவனம் பால் மூலம் தயாரிக்கப்படும் இதர பொருட்களான தயிர், நெய், வெண்ணெய், பால் பவுடர், பனீர் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இவ்வனைத்து பொருட்களுக்கான விலையை கனிசமாக உயர்த்தி உள்ளது.
விலை மாற்றம் பற்றிய விவரங்கள்
விலை உயர்விற்கு முன்னர் |
விலை உயர்விற்கு பின்னர் |
அரை லிட்டர் தயிர் - ரூ.25 |
அரை லிட்டர் தயிர் - ரூ.27 |
அரை லிட்டர் நறுமண பால் – ரூ 22 |
அரை லிட்டர் நறுமண பால் – ரூ 25 |
அரை லிட்டர் ஆவின் டிலைட் - ரூ.26 |
அரை லிட்டர் ஆவின் டிலைட் - ரூ.30 |
ஒரு லிட்டர் நெய் - ரூ.460 |
ஒரு லிட்டர் நெய் - ரூ.495 |
ஒரு கிலோ பால் பவுடர் - ரூ. 270 |
ஒரு கிலோ பால் பவுடர் - ரூ.320 |
ஒரு கிலோ பால்கோவா - ரூ.500 |
ஒரு கிலோ பால்கோவா - ரூ.520 |
ஒரு கிலோ பனீர் - ரூ.400 |
ஒரு கிலோ பனீர் - ரூ.450 |
Anitha Jegadeesan
Krishi Jagran