News

Tuesday, 09 June 2020 11:13 AM , by: Daisy Rose Mary

மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விவசாயிகள் அளித்த கோரிக்கையை ஏற்று மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டார்.
மேலும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் துறை சார்ந்து அலுவலர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

தோட்டக்கலை துறை நடவடிக்கை

இந்த நிதியை கொண்டு, பூச்சிகளை கட்டுப்படுத்தும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 10 ஆயிரம் ஏக்கரில் மாவுப்பூச்சிகள் ஒழிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க..
மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்! 
பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு - முதல்வர்

விவசாயிகளுக்கு அழைப்பு

விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் இருந்தால் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தோட்டக்கலைத் துறை பரிந்துரைக்கும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை அழிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான செலவு முழுதும், விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் என தோட்டக்கலை துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)