பெருகி வரும் தண்ணீர் பிரச்சனையால் தமிழக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாது என்னும் இடத்தில அணை கட்டுவதற்கான கோரிக்கையை மத்திய சுற்று சூழல் அமைச்சரவைக்கு அனுப்பி உள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. காவிரியில் அணை கட்டும் முயற்சியானது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, கர்நாடக அரசு அணை காட்டும் முயற்சியினை கைவிட வேண்டும் என கேட்டு கொண்டது.
தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகம் உட்பட காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அணை விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு விரைவில் தீர்வு வழங்குமாறு கேட்டுக் கொண்டது.
கர்நாடக அரசு எழுதியுள்ள மனுவில் குடிநீர் தேவைக்காகவும், வறட்சியை சமாளிக்கவும் அணை கட்டுவது அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. அணை கட்டுவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஆகுமென கணக்கிட பட்டுள்ளது. இதனால் 5 கிராமங்கள் மூழ்கும் வாய்ப்புள்ளது. எனவே அக்கிராம மக்களை மாற்று இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்ய பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.