தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி (TANSEED) யின் நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக, சட்டப்பேரவையில் இந்த ஆண்டு துறைக்கான கோரிக்கை அமர்வின் போது, தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ் 100 புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்- அப் ) இந்த ஆண்டு பயன்பெறும் என்றும், 100 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் மொத்தம் 10 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மே அன்பரசன் தெரிவித்தார்.
இந்நிலையில், புத்தொழில் ஆதார நிதி (TANSEED) யின் நான்காவது பதிப்பிற்கான அறிவிப்பை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாடு புத்தொழில் ஆதார நிதி (TANSEED) யின் நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆதார மானிய நிதி திட்டமானது தமிழ் நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க மையத்தின் (Tamil Nadu Startup and Innovation Mission) செறிவார்ந்த முன்னெடுப்பு ஆகும். புத்தாக்க சிந்தனையோடு இயங்கும் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு (STARTUPS) மானிய நிதியாக 10 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
மூன்று பதிப்புகளை தொடர்ந்து தற்போது நான்காவது பதிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்க தொடங்கியுள்ளது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்.
புத்தாக்க சிந்தனையோடு இயங்கும் நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ள நிறுவனங்கள், சமூகத்தில் நன்மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக இயங்கும் நிறுவனங்கள் ஆகியவை இந்த மானிய நிதிக்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் STARTUPTN மற்றும் STANDUP INDIA -ல் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க