தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதைப் போல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி (Gratuity)
03.10.2022 நாளிட்ட ஒன்றிய அரசின் நிதித்துறை ஆணையில் கண்ட E-II-(B), இந்திய அரசு, நிதியமைச்சகம், செலவினத் துறை உத்தரவின் அடிப்படையில் 03.10.2022 முதல் 34 சதவீத அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அதாவது 4 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறதோ, அதே தேதியில் அதே விகிதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் தமிழக அரசு வழங்கும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படியை 4% உயர்த்தி 38% அகவிலைப்படி 1.7.2022 முதல் ரொக்கமாக வழங்கிட உரிய ஆணை, தீபாவளிப் பண்டிகையினை கருத்தில் கொண்டு காலதாமதமின்றி உடனடியாக பிறப்பிக்கப்பட ஆவண செய்யுமாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக தமிழக முதல்வரை இந்த அறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க
ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி: இனி சம்பள உயர வாய்ப்பில்லை!
ரிசர்வ் வங்கி வெளியிடும் இ-ரூபாய்: என்ன ஸ்பெஷல் இருக்கு இதுல!