விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் (Co-operative banks) மூலம் அதிகளவில் கடன் தந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.18,181 கோடி கடன் (Loan) வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள்:
கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வசதிகள், இடுபொருட்களான உரங்கள் விநியோகம் மற்றும் பொது விநியோக முறை கிளைகளை நடத்தி வருகிறது. இவ்வங்கி சிறு தவணை (installment) மற்றும் நடுத்தர தவணை கடன்களை விவசாயம் மற்றும் இதர செயல்களுக்கு வழங்குகிறது. சிறு தவணை கடன்கள் 2 முதல் 15 மாதங்கள் மற்றும் நடுத்தர தவணை கடன்கள் 3 முதல் 5 வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்துதல் வேண்டும். பயிர் கடன்கள் (Crop loan) விவசாயிகளுக்குக் கொடுப்பது தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முக்கியப் பணியாகும். இதில் பதிவு செய்யப்பட்ட கரும்பு சாகுபடியாளர்களுக்கு 10 ஏக்கர் வரை கூட்டு பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் இதர பயிர்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. கடன் அளவு இதற்கு மேல் சென்றால், சொத்துக்கள் அல்லது நகைகள் அடமானம் வைத்து அதன் மீது வழங்கப்படுகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இதர வேளாண் தேவைகளான பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், விவசாயம் இல்லாத தேவைகளான நுகர்வோர் பயன்பாடு, வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் மற்றும் தொழில் கடன்கள் வழங்குகிறது. வேளாண் பொருட்கள் விற்பனைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருதல். அரசு 2006-07 ஆண்டிலிருந்து பயிர்களுக்கான வட்டி விகிதத்தை வருடத்திற்கு 9 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. சிறப்பு நடவடிக்கையாக சரியாக பணம் செலுத்தும் விவசாயிகளுக்கு அரசு வட்டி விகிதத்தை (Interest rate) 7 சதவிகிதம் இருந்து 5 சதவிகிதமாக அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்துள்ளது. இந்தத் தொகை 2008-09 ஆம் ஆண்டு 4 சதவிகிதம் மேலும் குறைக்கப்பட்டது.
தமிழகம் முதலிடம்
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிகளவில் கடன் தந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இத்தகவலை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் (Crop loan) தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பழங்காலத்தில் நெல் மற்றும் தானியங்களை சேமித்து வைக்க உதவிய மண் கலன் கண்டுபிடிப்பு!
சமவெளி பகுதிகளில், ஊட்டி பூண்டு விலை வீழ்ச்சி! கவலையில் விவசாயிகள்!
தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்! அதிக மகசூலுடன் நல்ல வருவாய்!