News

Monday, 24 August 2020 09:52 AM , by: Daisy Rose Mary

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளர்போருக்கு 50 சதவீத மானித்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

மீன் வளர்போருக்கு மானியம் 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியினை அதிகரித்திடவும், மீன் வளர்போரை ஊக்கப்படுத்திடவும், மாவட்ட மீன் வளர்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்கள் அமைத்த மீன் குளத்திற்கான மீன்குஞ்சு, தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.

திட்டத்திற்கான நிபந்தனைகள்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மீனவர்கள் மாவட்ட மீன் வளர்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருந்து, மீன் பண்ணையினை முகமையில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும், 2012-13-ம் ஆண்டில் இருந்து 2015-16-ம் ஆண்டு முடிய உள்ள கால கட்டத்தில் மீன் வளர்ப்பு குளம் அமைத்து அரசு நிவாரணம் ஏதும் பெறாதவர்களும் கடந்த 5 ஆண்டுகளில் மீன் குளம் அமைத்து மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மூலம் நிவாரணம் பெற தகுதியானவர்கள் என என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே தகுதியான பயனாளிகள் நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அளித்திட வேண்டும் என்றும் ஆட்சியர் ஆனந்த் கூறினார்.

மேலும் படிக்க...

தென்னந்தோப்பில் மீன் குட்டை அமைப்பவர்களுக்கு ரூ.25000 வரை மானியம்!!

மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை - விண்ணப்பிக்க அழைப்பு !!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)