மத்திய அரசால் வழங்கப்படும் புவிசார் குறியீடு என்னும் அங்கீகாரம் தற்போது திண்டுக்கல் பூட்டுக்கும் மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் கிடைத்துள்ளது. இதுவரை தமிழகத்தின் 29 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ள நிலையில், இவ்விரண்டையும் சேர்த்து 31ஆக உயர்ந்துள்ளது.
திண்டுக்கல் பூட்டு
திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய முழுவதிற்கும் நல்ல வரவேற்பு உண்டு. ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பூட்டு தயாரித்து வருகிறார்கள். மாங்காய்ப் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு என்று பல வகையான பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது. 1970 களில் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்தது. திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பூட்டு தொழிற்சாலைகளை உருவாக்கி, அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். 50-ற்கும் மேற்பட்ட பூட்டு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
காரைக்குடி கண்டாங்கி சேலை
காரைக்குடி கண்டாங்கி என்பது 250 ஆண்டுகள் பழமையானது. இந்த வகை சேலையினை செட்டியார் என்கிற சமூகத்தினர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். செட்டிநாடு கண்டாங்கி சேலை இந்திய முழுவதும் பிரசித்தி பெற்றது. நகரத்தார் நெசவு தனித்துவமானது எந்த சேலையிலும் இல்லாத வகையில், 48 அங்குலம் அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டது.
இவ்விரு பொருட்களும் நூற்றாண்டுகள் கடந்து இன்றளவும் தரம் மற்றும் அதன் தனித்துவம் மாறாமல் இருப்பதே புவிசார் குறியீடு கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.
Anitha Jegadeesan
Krishi Jagran