தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுவையிலும் ஆங்காங்கே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது.
திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம் போன்ற மாவட்டங்களில் லேசான முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. காற்றின் வேகமானது 40 முதல் 50 வரை வீசக்கூடும் என்று அறிவித்துள்ளது.
அதே சமயம் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயில் சதத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக வெப்பமும் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் குறைத்தபட்சமாக 84 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் இருக்கும் என கூற பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பம் திருத்தணியில் பதிவாகி உள்ளது. வெயிலின் தாக்கம் மேலும் தொடரும் எனவும், இருப்பினும் வானம் பல இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூற பட்டுள்ளது.