பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கினாலும் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் மூலமாகவே நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து, மாணவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் இரவுநேர பொதுமுடக்கம், ஞாயிறு பொது முடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
மேலும் பள்ளிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளுக்கும் தேர்வையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல், தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்ற குழப்பம் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்படி நடைபெறும் என்பது குறித்து உயர் கல்வித் துறை க.பொன்முடி விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அறிவியல், கலை கல்லூரிகளுக்கு செமல்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அட்டவனைகளும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்றாலும். தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போலவே, ஆன்லைனில் நடைபெறும். இதில், மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் குழப்பமடையத் தேவையில்லை கல்லூரிகளில் 1, 3, 5 ஆகிய செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, செய்முறை தேர்வு உள்ளிட்ட வகுப்புகள் போன்றவை நேரடியாக நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆன்லைன் தேர்வுகளும் முறையாக நடத்தப்படும். அதனைத்தொடர்ந்து, வகுப்புகள் எப்போதும்போல நேரடியாக நடைபெறும். தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான இடிந்து விழும் நிலையிலான பள்ளி உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே, பள்ளிக் கட்டடங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கல்லூரிக் கட்டடங்களும் கூட ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கல்லூரிகளில் ஏதாவது இடிந்து விழும் நிலையிலான பழையக் கட்டடங்கள் இருப்பின், அதனை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே மாணவர்கள் குழப்பம் அடையாமல் தொடர்ந்து, ஆன்லைன் தேர்வுக்கான தயாரிப்பில் மேர்கொள்ளலாம். பிப்ரவரி 1 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
SBI வங்கி: ஆன்லைனில் KCC கார்டு-க்கு விண்ணப்பிக்கலாம்: வழி இதோ!
2022 டிஜிட்டல் பட்ஜெட் தாக்கலை, டிஜிட்டல் மூலம் பார்க்க, செயலி அறிமுகம்