News

Friday, 26 July 2019 02:04 PM

ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல் பட்டு வருகிறது.  விருதுநகர் கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. குறைந்த அளவே பணியிடங்கள் இருப்பதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தொழில்நுட்ப வல்லுநர், மேனேஜர், டிரைவர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. பணியிட விவரங்கள், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியன கீழே கொடுக்க பட்டுள்ளன.

காலி பணியிடங்கள்
தொழில்நுட்ப வல்லுநர் – 1
மேனேஜர் – 1
டிரைவர் - 1 

கல்வி தகுதி மற்றும் ஊதிய வருமானம்

மேனேஜர்
கால்நடை பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary Council-லில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மாத வருமானம் : Rs 55500 – 175700

தொழில்நுட்ப வல்லுநர் Gr - II
பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள், ITI , டிப்ளமோ படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மாத வருமானம் :  Rs 19500 – 62000

டிரைவர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பு மற்றும்  கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத வருமானம் : Rs 19500 – 62000

விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்ப படிவங்களை https://aavinmilk.com/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவதுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager,
Virudhunagar District Co-operative Milk Producers, Union Limited,
Srivilliputtur

பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட வகுப்பை சார்த்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்.

 விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.08.2019

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்கை பார்க்கவும். 

https://bit.ly/2OkcaX7

https://bit.ly/2GvXhuj

Anitha Jegadeesan
Krishi Jagran

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)