மிக்ஜாம் புயலாய் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி முதல்வர் அறிவித்த 6000 ரூபாயினை நிவாரணமாக வழங்க அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ள நிலையில் வருகிற 17 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனிடையே பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகையினை வாங்க தகுதியுடையவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
(அ) சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்கள்:
(ஆ) செங்கட்டுமாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்
(இ) காஞ்சிரம் மாவட்டம்: குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்.
(ஈ) திருவள்ளூர் மாவட்டம்: (1) பொன்னேரி (2) கும்மிடிப்பூண்டி, (3) ஆவடி (4)பூவிருந்தவல்லி (5) ஊத்துக்கோட்டை (6) திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.
இந்த புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கலாம் என அரசின் சார்பில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட/ இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிகள்/ பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை வெள்ளத்தால் ஒன்றிய/ மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு/ துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விபரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு அதனடிப்படையில் அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாப விலைக்கடைகளிலேயே தேவையான அளவு வைத்திட அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: பால் கொள்முதல் விலையை உயர்த்தியது ஆவின்- முதல்வர் வெளியிட்ட நற்செய்தி
டோக்கன் (Token) வழங்கும் முறை :
நிவாரணத் தொகையை ரொக்கமாக வழக்குவதில் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் விநியோகிப்பதற்காக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட/ இரண்டு நாட்களுக்குமேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள்/ பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும்.
கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் காவல்துறையுடன் இணைந்து தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more:
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்புடன் விவசாயம்- லட்சங்களில் வருமானம் ஈட்டும் இளைஞர்
அடேங்கப்பா.. ஒரே நாளில் 1000 ரூபாய் வரை விலை அதிகரித்த தங்கம்!