News

Friday, 18 June 2021 06:51 AM , by: Daisy Rose Mary

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9,118 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று 1,75,010 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் தமிழகத்தை சேர்ந்த 9,115 பேரும் பிற மாநிலத்தை சேர்ந்த 3 பேர் என புதிதாக 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதல் 5,013 பேர் ஆண்கள், 4,105 பேர் பெண்கள். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.

210 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 210 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,548 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 22,720 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,66,793-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 1,00,523 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

3-வது அலை குழந்தைகளைப் பாதிக்குமா? 

இந்நிலையில், கொரோனா தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில்,இது தொடர்பாக எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும்  மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர்.  

2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 

இதில் குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது.இவ்வாறு குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாகப் பாதிக்காது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க....

பிரதமரை சந்தித்து 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்!

ரூ. 61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)