News

Thursday, 13 June 2019 03:24 PM

தமிழக கல்வி துறை பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முதல் கட்டமாக 70 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்க பட உள்ளது.

பள்ளிகளின் கட்டமைப்பு

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் படி பள்ளிகளின் உள்கட்டமைப்பு,  வகுப்பறைகள், கற்பிக்கும் முறை போன்றவற்றில் பல சீர்திருத்தங்களை செய்து வருகிறது. மாணவர்களுக்கு உதவும் வகையில் பாடப்புத்தகம் முதல் சைக்கிள், மடிக்கணினி இவற்றை  இலசமாக வழங்கி வருகிறது. இத்துடன் தற்போது இலவச சீருடை வழங்க உள்ளது.

 ‘‘கியூ-ஆர்" வசதி கொண்ட "ஸ்மார்ட் கார்டு "

தனியார் பள்ளிகளில் வழங்க படும்  அடையாள அட்டைபோன்று அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில்  ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க பட உள்ளது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதில் மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பிறந்த தேதி, அடையாள எண், புகைபடம் ஆகியன இடம் பெரும்.

புதியதாக ‘‘கியூ-ஆர்" வசதியினை அறிமுக படுத்தி உள்ளது.  நவீன தொழில் நுட்பமான இந்த  கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து கொண்டால் மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.மேலும் இதன் மூலம் வெப்சைட்டிலும் எளிதாக மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த அடையாள அட்டை தவறினால் கூட மாணவர் பற்றிய முழு தகவல்களை நம்மால் பெற முடியும்.  

தரம் உயர்த்த பட்ட புதிய பாட திட்டம்

இந்த வருடம் 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை அறிமுக படித்தியுள்ளது. போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையிலும், கல்வித்திறனை மேம்படுத்தும் வகையிலலும் புதிய பாடத் திட்டங்கள் வடிவமைக்க பட்டுள்ளன.

பட திட்டத்தின் கீழ் ஒழுக்கம், நற்பண்புகள் போன்றவை கற்பிக்க பட உள்ளது. பள்ளிகளில்  விளையாட்டை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் விடுவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தர உள்ளது.  இது போன்றவைகள் உளவியல் ரீதியாக மாணவர்களை மேம்படுத்தும். இதுமட்டுமல்லாது வாரத்தில் ஒரு நாள் பாலியல் பற்றிய வகுப்புகள் எடுக்க பட உள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)