சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்து. மழை காரணமாகச் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் கொட்டி தீர்த்த கன மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை (South west monsoon) தீவிரம் அடைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சென்னை கிண்டி, ஈக்காட்டுதாங்கல், குரோம்பேட்டை, பூந்தமல்லி உள்பட பல இடங்களில் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மழைநீரில் தத்தளித்த சென்னை
கனமழை காரணமாக நேற்று சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குரோம்பேட்டை (Rain in crompet) பகுதிகளில் 2அடி அளவு தண்ணீர் தேங்கியது , இதனால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலைகளில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் தொடர் மழை காரணமாகச் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது.
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (Tamilandu expects Heavy to very heavy rain) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும்
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை பொழிவு (Rain in last 24 hours)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் , நாகபட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மற்றும் திருப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for Fisherman)
-
இன்று தமிழக கடலோர பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்
-
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 - 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை
கேரளா, டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்ரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களுக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து?
இந்திய எல்லையில் நுழையக் காத்திருக்கும் (வெட்டுக்கிளி) எதிரிகள் - மத்திய அரசு எச்சரிக்கை!