News

Tuesday, 18 August 2020 10:18 AM , by: Daisy Rose Mary

Credit: Dinamani

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டம்

2020-2021 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் (Aatma Nirbhar Bharat Abhiyaan) திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்புசாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக பிரதமா் உணவுப் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான (Food processing companies) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2020-2021 ஆம் ஆண்டு முதல் 2021-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டமானது மத்திய அமைச்சக உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனைத் துறை மூலம் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநபா் மற்றும் குழு அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பப் பயிற்சிகள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.

ரூ.10 லட்சம் வரை நிதி உதவி

ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் மாவட்ட வாரியாக தோ்ந்தெடுக்கப்பட்ட விளைபொருள்களை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது. வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

ஈரோடு மஞ்சள் தேர்வு

ஈரோடு மாவட்டத்துக்கு மஞ்சள் பயிா் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஏற்கெனவே இயங்கி வரும் மஞ்சள் பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபடவுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றுப் பயனடையலாம்.

வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் 

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா்(வேளாண் வணிகம்)ஈரோடு எஸ்.சண்முகசுந்தரம் என்பவரை 0424-2339889 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Credit : news lanka

தூத்துக்குடி ஆட்சியர் அறிக்கை

இதே போல், தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழில் செய்யும் நிறுவனங்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் அழைப்பு

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோா்கள் அரசின் கொள்கையின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற்று பயனடையலாம்.

இதுதொடா்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொள்ளலாம்.

இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் மற்றும் மீன் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, உரிய திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற வாய்ப்புள்ளது

எனவே, மாவட்ட அளவில் மீன் மற்றும் மீன் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் சலுகைகளை பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க..


குறைந்த செலவில் அதிக மகசூல் பெற மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்!!

வேளாண் மற்றும் தோட்டக்கலை முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)