பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 June, 2021 7:20 AM IST

நடப்பாண்டு சிவகங்கை மாவட்டத்தில் 5,900 மண்மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில்

மண் பரிசோதனை மேற்கொள்ள முகாம் 

பயிர் வளர்ச்சிக்கு தேவையான 16 வகை சத்துக்கள் மண்ணில் உள்ளன. மண்ணில் உள்ள சத்துகளின் அளவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உரமிடுதல், பயிர் தேர்வு செய்வதன் மூலம் விவசாயிகள் உரசெலவினை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மண் ஆய்வு செய்திட வசதியாக தற்போது அனைத்து வட்டாரங்களிலும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பயிர் சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக கோடைக்காலங்களில் பயிர் இல்லாத தருணத்தில் மண் மாதிரி எடுத்து பரிசோதனை செய்தல் சிறந்தது. நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 5,900 மாதிரிகள் சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மண் பரிசோதனைக்கு ரூ.20 கட்டணம் செலுத்திட வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம்: வேளாண் துறை அறிவுரை!!

English Summary: Target to collect 5,900 soil samples in Sivagangai says Agriculture Department
Published on: 03 June 2021, 07:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now