20 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாக தெரிவித்த அவர், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் விளக்கினார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விவசாய தொழில்முனைவோருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தினை உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் உள்ளது எனவும் கூறினார்.
2023-24 நிதியாண்டில் 20 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: