News

Saturday, 05 February 2022 07:11 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களை குத்தகை விடுவது சம்பந்தமாக டெண்டர் அறிவிப்பை கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி தமிழக அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கொரோனா ஊரடங்கு காலத்தில் 16 மாதங்கள் பார்களை திறக்காததால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாக மனுதாரார் ஜெகநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்ட குத்தகையை நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுக்க முடியாது.
அதுமட்டுமல்ல, மதுபானம் தொடர்பாக அரசு ஏதேனும் கொள்கை முடிவு எடுத்து, மதுபான பார்களை மூடினால் ஒப்பந்ததாரர்கள் இழப்பீடு எதுவும் கோர முடியாது. அதேநேரத்தில், டெண்டர் சட்டத்தின்படி மனுதாரர்கள் அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெற வழி உள்ளது.

அதிகாரம் இல்லை

டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்வதற்கு மட்டும்தான் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. பார்களை திறப்பதற்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை.தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ன்பிரிவு 4 ஏ வின் படி தனியார் இடத்தில் அதாவது ஒருவர் தன் வீட்டில் வைத்து மது அருந்தலாம். பொது இடத்தில் அருந்தக்கூடாது.

தடை

இந்த விதிக்கு புறம்பாக பார்கள் நடத்தப்படுகின்றன. சட்டப்படி யாரும் பொது இடத்தில் குடிக்கக்கூடாது. அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக சட்ட விதிகளுக்கு எதிராக பொது இடத்தில் பொது மக்களை மது அருந்த வைப்பதை நியாயப்படுத்த முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது.எனவே, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வராமல் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை. பார் குத்தகை வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

6 மாதத்திற்குள்

கடந்த டிசம்பர் 14-ந்தேதி அறிவிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மது பார்களை 6 மாதத்திற்குள் மூடவேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட குத்தகையை திரும்பப் பெற டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

கோழிக்கொண்டை பூ சாகுபடிக்கு மானியம் ?

ரூ.100யை எட்டிய கேரட் - வரத்து குறைவால் விலை உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)