தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை மதுபானங்களுக்கு விலை ஏற்றம் செய்து திரும்ப எடுத்துக் கொள்கின்றனர்' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். மதுப் பழக்கத்தால் பலரது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பது நிதர்சனமான உண்மை. இதைத் தடுக்க வேண்டிய அரசே மதுவை விற்பனை செய்வது அதனிலும் கொடுமையான செயலாக உள்ளது.
டாஸ்மாக் கடைகள் (Tasmac Shops)
தமிழக அரசே மது விற்பனையில் ஈடுபட்ட பிறகு லட்சக்கணக்கான குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 'டாஸ்மாக்' கடைகள் துவங்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து வயதினருமே மது பழக்கத்துக்கு ஆளாகி விட்டனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் நடைபெறவும், அதிகரிக்கவும் மது காரணமாகிறது.
குஜராத்தைப் போல தமிழகத்தில் தனிநபர் வருமானம் ஏன் உயரவில்லை என்றால், 'இது திராவிட மாடல்' என்கிறார், நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன். குடும்பத்தின், 90 சதவீத வருவாய் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் மூலமே உறிஞ்சி எடுக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டுள்ளது.
கொடுத்த பணத்தை திரும்பப்பெற ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் பெறக்கூடிய வகையில், மது பாட்டில்களுக்கு, 10 ரூபாய் முதல் விலை ஏற்றத்தை அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றார்கள். தற்போது, பூரண மதுவிலக்கை கொண்டுவராமல், மதுபான விலையை உயர்த்தி உள்ளனர். முழு மதுவிலக்கை அமல்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கிருஷ்ணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
டாஸ்மாக் கடைகள் திறப்பை தடுக்க மக்களுக்கு அதிகாரம்: புதிய சட்டத்திருத்தம்!
குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தினால் 6 மாதம் ஜெயில் தண்டனை உறுதி!