News

Saturday, 30 October 2021 07:17 PM , by: R. Balakrishnan

Tata Group Scholarship

25 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை நிதியில் இளநிலை பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை செயல்படுத்தப்பட்டுள்ளது.

படிப்பு நிலை: இளநிலை பட்டப்படிப்பிற்கு மட்டும் இந்த உதவித்தொகை (Scholarship) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

படிப்புகள்: கார்னெல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். எனினும், கட்டடக்கலை, ஆர்ட் மற்றும் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எக்னாமிக்ஸ், மேனேஜ்மெண்ட், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ் மற்றும் இதர அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த படிப்புகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உதவித்தொகை எண்ணிக்கை: ஒவ்வொரு ஆண்டும், 20 சிறந்த இந்திய மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.

முக்கிய தகுதிகள்: இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும். பள்ளி படிப்பை இந்தியாவிலேயே மேற்கொண்டிருக்க வேண்டும்.

விதிமுறைகள்: நிதித் தேவை இருக்கும் வரை, இளநிலை பட்டப்படிப்பை முடிக்க தேவையான செமஸ்டர்களுக்கு டாடா உதவித்தொகையை பெறலாம். எனினும், அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரையே உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதாரணமாக, ஆர்கிடெக்சர் படிப்பின் ஐந்து ஆண்டுகாலத்தில் பத்து செமஸ்டர்கள் தேவைப்படும். ஆனால், எட்டு செமஸ்டர் வரையே உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், இரண்டு மேஜர் படிப்புகள் மற்றும் அல்லது இரட்டைப் பட்டப்படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை

சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் டாடா உதவித்தொகைக்கு பரிசீலிக்க தகுதியுடையவர்கள். பல்கலைக்கழக விதிமுறைப்படி, காலேஜ் ஸ்காலர்ஷிப் சர்வீஸ்’ முறையில், சர்வதேச மாணவர்களுக்கான நிதி உதவி விண்ணப்ப நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

விபரங்களுக்கு: https://admissions.cornell.edu/apply/international-students/tata-scholarship

மேலும் படிக்க

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: கடைசி தேதி உள்ளே!

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசு பள்ளி: தலைமை ஆசிரியை அசத்தல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)