News

Friday, 18 September 2020 10:39 AM , by: Elavarse Sivakumar

விரைவு விவசாய மின் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், வரும், 21ம் தேதி முதல் அக்., 31 வரை, விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு (Minister Review)

சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், விவசாய மின் இணைப்பு தொடர்பாக, அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

பின், நிருபர்களிடம், தங்கமணி கூறியதாவது:

மின் இணைப்பு பெற, காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, விரைவு மின் இணைப்பு வழங்கும், 'தத்கல்' திட்டம், இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், 5 குதிரை திறனுள்ள மின் மோட்டாருக்கு, 2.50 லட்சம் ரூபாய், 7.50 திறனுக்கு, 2.75 லட்சம் ரூபாய். 10 திறனுக்கு, 3 லட்சம் ரூபாய, 15 குதிரை திறனுக்கு, 4 லட்சம் ரூபாய் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்தும், 25 ஆயிரம் விண்ணப்பதாரருக்கு, இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி, வரும், 21ம் தேதி முதல், அக்., 31ம் தேதி வரை, பணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், அக்., 31 வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும் ஏற்கப்படும்.

50ஆயிரம் இணைப்புகள் (50,000 Connection)

இது தவிர, 25 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள், சாதாரண வரிசை மற்றும் திருத்தப்பட்ட சுயநிதி திட்டங்களின் கீழ் வழங்கப்படும். 

நடப்பாண்டில், விவசாயிகளின் நலன் கருதி, 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க...

சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவிப்பு- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணிப்பு!

அனைத்து ரக வெங்காய ஏற்றுமதிக்கும் தடை- மத்திய அரசு அதிரடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)