தற்போது பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தில் செல்வதையே விரும்புகின்றனர். இதையடுத்து தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருப்பதால் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். இந்த நிலையில் நீங்கள் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? இதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு (Ticket Reservation)
டிக்கெட் முன்பதிவு
நாட்டில் பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையானது பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையானது 24ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். அதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனை தொடர்ந்து தற்போது பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில் டிக்கெட்டுகளை IRCTC என்ற ஆப் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தவாறு முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் IRCTCயில் ஒருவர் தனது IRCTC-யின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் 2 மடங்கு கூடுதலான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அதாவது ஒரு மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். இதையடுத்து நீங்கள் உடனடியாக பயணம் மேற்கொள்ள தட்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்லாம். இதில் A/C வகுப்பிற்கான முன்பதிவு காலை 10 மணிக்கும் , ஸ்லீப்பருக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.
வழிமுறைகள்:
- இதற்கு முதலில் IRCTC-யின் இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- இதில் உங்களின் Profile பகுதிகளுக்கு சென்று பயணிகளின் விவரங்கள் கொண்ட ‘Master List’ ஒன்றை உருவாக்க வேண்டும்.
- இப்போது தட்கலில் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால் தனி பயணப் பட்டியலை உருவாக்க வேண்டும்.
- பின்னர் ஸ்டேஷன் கோட்கள், ரயில் சென்றடையும் நிலையங்கள் என அனைத்தையும் சரிபார்த்த பிறகு
முன்பதிவு செய்ய வேண்டும். - உங்களுக்கு உடனடியாக தட்கல் டிக்கெட் கிடைக்க வேண்டுமெனில் பெர்த் ஆப்ஷன்கள் எதையும் கொடுக்காமல் நீங்கள் புக் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க
ரயில் பயணிகளுக்கு வரப்போகுது சூப்பரான வசதி: கட்டணம் இல்லாமல் இனி ரயில் டிக்கெட்!
100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!