(தாட்கோ) நிறுவனமானது 12ஆம் வகுப்பு, மற்றும் எதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு TCS iON நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்பம் சம்பந்தபட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இச்செய்தி பற்றிய முழு விவரம் இதோ!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கு வருகிறது. அதன் அடிப்படையில் 12ஆம் வகுப்பு, மற்றும் எதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு TCS iON நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்பம் சம்பந்தபட்ட பயிற்சியான Data Analytics and Reporting, Applied Cloud Computing, Practical Approach to cyber Security, Machine Learing For Real world Application, Intelligient Game Design and its Applications மேலும் Animation சம்பந்தப்பட்டபயிற்சியான Graphic Designing (Professional) Motion Graphics போன்ற பயிற்சிகளை இணையதளம் வழியாக பயிற்று வித்து முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற BE/B.tech/BCA/B.Sc(CS)/B.Sc (CS&IT)MCA/ M.Sc(CS)/M.Sc(CS&IT) அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனிமேஷன் (Animation) சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற 12ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பிய மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் TCS iON நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் NQT (National Qualifier Test) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS iON நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையத்தில் நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் TCS iON நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.
மேலும் படிக்க:
உரிமை கிடைக்க நாங்கள் எந்த எல்லைக்கும் போக தயார்: அன்புமணி ராமதாஸ்
மருத்துவக் கல்லூரி தேர்வு செய்ய கால அவகாசம் ஆக.3 ஆம் தேதி வரை நீட்டிப்பு!