News

Friday, 06 December 2019 11:53 AM , by: Anitha Jegadeesan

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் செயல்பட்டு வரும் தென்னிந்திய தேயிலை வாரியம் ஒவ்வொரு மாதமும் பசுந்தேயிலைக்கு கொள்முதல் விலையை நிர்ணயித்து வருகிறது. அந்தவகையில் வாரியத்தின் இயக்குனர் கொள்முதல் விலை கிலோவிற்கு, ரூ.12.45 என நிர்ணயக்க பட்டுள்ளது என தெரிவித்தார்.

கடந்த, 2015ம் ஆண்டு முதல் தென்னிந்திய தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாதத்திலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையும், ஏலம் விடப்படுகிறது. இந்த தேயிலையின் தூள் விலையை அடிப்படையாக கொண்டு பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்து வருகிறது.

குன்னூரில் ஏராளமானோா் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த பலத்த மழையால் தேயிலை பறிப்பதில் சிரமம் ஏற்பட்டது. விளைச்சல் அதிகரித்து, தரத்தில் குறைவான தேயிலைகள் கையிருப்பு உள்ளன. இதனால் தேயிலைகளை வாங்க தொழிற்சாலைகள் மறுப்பதுடன், வாங்கிய இலைகளுக்கும் உரிய விலையைக் கொடுப்பதில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.

தேயிலை விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச விலையை வழங்காத தொழில் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஏதேனும்  புகார்கள் இருந்தால் விவசாயிகள் தென்னிந்திய தேயிலை வாரியத்தை அணுகி தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)