இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே எல்லா காலத்திற்கும் ஏற்றது. அந்த வகையில், எல்லா கடவுள்களும் வாசம் செய்வதாக குறிப்பிடப்படும், பசுக்களின் சாணத்திலும், கோமியத்திலும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன.
இவை நம் சுற்றுப்புறத்தை மட்டுல்ல, நம் உடலை உள்ளேயும், வெளியேயும் பராமரிக்கவும், பாதுகாத்துககொள்ளவும் பயன்படுகின்றன என்பது நம்மில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். அது எப்படி? என்று சந்தேகிப்பவரா நீங்கள்? உங்களுக்காகவே இந்த பட்டியல். மாட்டு சாணத்தில் இருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த பொருட்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன.
எத்தனை பொருட்கள் (How many)
மாட்டுச்சாணம் மற்றும் கோமியத்தைப் பயன்படுத்தி, குளியல் சோப்பு (soaps), ஷாம்பூ(shampoos), டூத் பேஸ்ட் (toothpaste) ஷேவிங் க்ரீம் (shaving creams) ஃபேஸ் வாஷ் (face washes) டீ (Tea) உயிர் உரங்கள்(bio fertilisers) ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆன்லைனில்(Online)அமேசான் (Amazon) ஃபிளிப்கார்ட் (Flipcart) (பிரபல நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. கூடுதல் நறுமணம் தருவதுடன், சரும பாதுகாப்பையும் உறுதி செய்வதால், மக்கள் இந்த பொருட்களை விரும்பி வாங்குகின்றனர்.
பிரத்யேக தீவனங்கள் (Special Food)
குறிப்பாக கிர் ரக மாடுகளின் சாணம் மற்றும் கோமியத்தையே இவற்றைத் தயாரிக்க பிரபல நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. இதற்கென இந்த பிரத்யேக தீவனங்கள் மூலம் இந்த மாடுகள் கூடுதல் அக்கறையுடன் வளர்க்கப்படுகின்றன.
மாட்டின் பால், நெய், சாணம், கோமியம் மற்றும் தயிரைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா மட்டுமல்லாமல் அதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பலவிதப் பொருட்களும் நல்ல லாபத்தை ஈட்டித்தருகின்றன.
கவ்பதி (Cowpathy) என்னும் நிறுவனம் சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து தயாரிக்கும் டூத் பேஸ்ட், அன்டர் ஐ ஜெல் (Under eye gel) ஷேவிங் க்ரீம் (Shaving cream) ஆகியவை 14 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுன்றன என்பதை நம்பமுடிகிறா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் அதுதான் உண்மை.
கோமியம், மூலிகைகள், தேன் ஆகியவற்றை முக்கிய மூலப்பொருட்களாகக் கொண்டு இந்நிறுவனம் தயாரித்துள்ள சோப்பு பேக், 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் மொத்தம் 6 மூலிகை சோப்புகள் இடம்பெற்றிருக்கும். இதேபோல் கூந்தல் பராமரிப்பிற்கான பொருட்களும் கோமியம் மற்றும் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் மாட்டு சாணம் விமானம் மூலம் வெளிநாட்டிற்கும் பறக்கிறது.
200 மெ.டன் உளுந்து கொள்முதல்- முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு !
பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!