ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழில் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது, மேஜை , நாற்காலிகளை உடைப்பது, ஆசிரியர்கள் முன்பு நடனமாடுவது, மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடுதல் போன்ற வீடியோக்களை பார்ப்போரை அதிர வைக்கிறது.
மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பதை வைத்துக்கொண்டு, ஆசிரியர்களிடம் அத்துமீறுவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாணவர்களின் செயல்களுக்கு கொரோனா ஊரடங்கு, போதைப்பழக்கத்திற்கு அடிமை போன்றவை காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இதனை தடுத்திட பள்ளி கல்வித் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், TC-லும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். அதேபோல், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க