News

Sunday, 01 August 2021 10:54 PM , by: Elavarse Sivakumar

Credit : TamilNadu Tourism

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையில் தொற்று உச்ச அளவை எட்டியது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு என அதிரடிக் கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது.

தரிசனத்திற்கு அனுமதி (Permission for Dharsan)

இதன் பயனாக, கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பின்னர் தொற்றுப்பரவல் கட்டுக்குள் வந்ததால், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

ஆடிப் பூஜைகள் (Adi Pujas)

ஆனால் தற்போது, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் சற்று அதிகரித்திருப்பதுடன், ஆடி மாதத்தையொட்டி, கோவில்களில் கூட்டம் அலைமோதத் தொடங்கிவிட்டது. குறிப்பாக அம்மன் கோவில்களில், ஆடிமாத விஷேசமாகப் பொங்கலிடுதல், கூழ் வார்த்தல் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதனால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்தது.

கேரளா அபாயம் (Kerala risk)

மேலும் அண்டை மாநிலமான கேரளாவில், தொற்று பாதிப்பு தீயாய் பரவை வருவதோடு, இந்தியாவின் மொத்த தொற்று எண்ணிக்கையில், பாதி அளவு பாதிப்பு கேரளாவில் உள்ளது.

பக்தர்களுக்குத் தடை (Prohibition for devotees)

இந்நிலையில், கொரோனா 3ம் அலை (Corona Third Wave) பரவலை ஆரம்ப கட்டத்திலேயேக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர்கள் உத்தரவு (Collectors ordered)

ஆடி மாதத்தில் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கோவில்களில் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

திருவிழாக்கள் (Festivals)

  • பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆடி மாதத்தில், ஆடிக் கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

  • இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் நிலையில் தொற்று பரவும் அபாயம் மிகவும் அதிகரிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • ஆடி மாத பண்டிகையில் முருகன், அம்மன் கோவில்களில் விழா எடுக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உறுதி (Minister confirmed)

இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் சற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி வரை தளர்வுகளின்றி ஊரடங்கை நீட்டித்து உள்ளதாக கூறினார்.

மேலும் படிக்க...

கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!

குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)