ஊரடங்கைத் தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 3,000 கோயில்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜூன் 25 அன்று, கோவிட் -19 ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோயில் அதிகாரிகள் கோயில்களை சுத்தப்படுத்தவும், வரிசைகளில் நின்று தரிசனம் பெற தடுப்புகளை அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்து மத மற்றும் அறக்கட்டளை (எச்.ஆர் & சி.இ) துறையின் மூத்த அதிகாரி ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் பேசுகையில், “கோவிட் -19 இன் முதல் அலைகளின் போது நாங்கள் பின்பற்றிய நெறிமுறைகள் அப்படியே இருக்கும்.பிரகாரங்களுக்குள் உட்காரவோ சுவர்களையோ சிலைகளைத் தொடவோ மணிகளை அடிக்கவோ அனுமதி இல்லை. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று இந்து மத மற்றும் அறக்கட்டளைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயில்களை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஒரு பிரிவு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களைத் தவிர, பக்தர்கள் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஹெல்ப்லைனை 044-28339999 என்ற எண்ணில் அழைத்து கோயில்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் கேட்கபட்டுள்ளதாகவும் அதில் சுமார் 60% அழைப்புகள் இது தொடர்பானவை என்று அவர் கூறினார்.
பக்தர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம். கோவில் நிலங்கள் அல்லது திருவணி பணிகள் தொடர்பான புகார்கள் அல்லது கோயில்களுக்குத் தேவையான புகார்களை பதிவு செய்யவும் இந்த எண்ணில் அழைக்கலாம்.பல சிறிய கோயில்களில் கை சுத்திகரிப்பு மருந்துகள் இல்லை சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படவில்லை என்று புகார்களும் எழுந்துள்ளன. சனிக்கிழமை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு இலவச கோவிட் -19 சோதனை முகாமை திறந்து வைத்தார்.
மேலும் படிக்க: