விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து, நேற்று விவசாயிகள் புறப்பட்டனர். மார்ச் 21 ஆம் தேதி டெல்லியில் போராட்டம் தொடங்கும் என கூறப்படுகிறது.
நீதி கேட்கும் போராட்டம்
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போதும், பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, டெல்லி நாடாளுமன்றம் நோக்கி நீதி கேட்கும் நெடும் பயணம், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
விவசாயிகள் போராட்டம்
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்தப் பயணத்தின் நிறைவாக மார்ச் 21 ஆம் தேதி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத்தலைவர் வி.எஸ்.வீரப்பன், வடக்குமாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் அதிகமான விவசாயிகள், தங்கள் குடும்பத்தினருடன் நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டனர்.
மேலும் படிக்க
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை மையம் தகவல்!
e-NAAM: மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி!