கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றித் தொற்றுக் குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிரடி நடவடிக்கைகள் (Action)
கொரோனாப் பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற 21-ந்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பாதிப்பு குறைந்துள்ளது (The vulnerability is reduced)
இதனிடையே தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 267 பேர் உயிரிழந்த நிலையில் 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தக் கொரோனா பாதிப்பு தற்போதுப் படிப்படியாக குறைந்து வருகிறது.
முதல்வர் நன்றி (Thank you Chief)
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்டுக்குள் கொரோனா (Corona under control)
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது.
முறையாகப் பின்பற்றினீர்கள் (You followed properly)
அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் குறைந்துள்ளது.
டாஸ்மாக் விவகாரம் (The Tasmac affair)
-
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
-
டாஸ்மாக் கடைகள் முழுமையாகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.
-
டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்.
-
கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.
சுயக் கட்டுப்பாடு அவசியம் (Self-control is essential)
காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும்.
முற்றுப்புள்ளி (End)
முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
விரைவில் பொது போக்குவரத்து (Public transportation soon)
பொதுபோக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். தொற்றுப் பரவலைத் தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது.
அரசின் விதிகளைக் பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி .
50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் 15 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகி உள்ளது.
ஒத்துழைக்க வேண்டும் (To cooperate)
ஆக்ஸிஜன் பற்றாக்குறை படுக்கை வசதி இல்லை போன்ற நிலைமை தற்போது இல்லை. கொரோனாக் கட்டளை மையத்தைத் தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!