இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 August, 2022 12:11 PM IST

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அந்த மாணவ- மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது உறுதியாகியிருக்கிறது.

மாணவர்களின் நலன்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமானோர் இறந்தனர். அந்த வகையில் தங்கள் பெற்றோரை கொரோனா வைரஸ் தொற்றால் இழந்த மாணவ- மாணவிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.

அரசு அறிவிப்பு

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக , கொரோனாத் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வந்தாலும் அவர்களும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

விலக்கு

கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை பள்ளிகள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!

கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!

English Summary: The announcement that the government agrees to the educational fees of the students!
Published on: 02 August 2022, 12:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now