மதுரையில் தீபாவளிக்குத் துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்ற சிறுவன் ஒருவன், எஸ்கலேட்டரில் தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தீபாவளி பர்சேஸ்
மதுரை எஸ்.எஸ்.காலனி அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தமது மனைவி, 7வயது மகன் நித்திஸ் தீனா ஆகியோருடன், அப்பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளிக்குத் துணி எடுக்கச் சென்றார்.
துணிகளை வாங்கிவிட்டு 5வது மாடியில் இருந்து நகரும் படிக்கட்டு (Escalator) வழியாக இறங்கினர். அப்போது, எஸ்கிலேட்டர் அருகில் இருந்த இடைவெளியின் திடீரெனச் சிறுவன் தவறி விழுந்தான்.
தலையில் படுகாயம் (Head injury)
அடுத்தடுத்து மாடிகளில் உள்ள கல்தூண்கள் சிறுவனின் தலையில் இடித்ததில் தலை உடைந்து அதிகளவிற்கு ரத்தம் வெளியேறிய நிலையில் சிறுவன் மயக்கமடைந்தான். அதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
பாதுகாப்புக் குறைபாடு (Lack of security)
கடையில் இருந்த எஸ்கிலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் உரிய முறையில் இல்லாத நிலையில் குழந்தை தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...
ஆசியாவிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம்!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!