News

Saturday, 27 August 2022 09:54 AM , by: R. Balakrishnan

Electricity tariff

மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய நிலை இருப்பதாக, மக்களுக்கு மின் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

மின் கட்டண உயர்வு (Electricity Bill Hike)

தமிழக மின் வாரியம் சமர்ப்பித்துள்ள மனுக்களின் அடிப்படையில், மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்கும் கட்டணங்களை உயர்த்த, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. அம்மனுக்கள் மீது மக்களிடம் கருத்து கேட்டு, அதற்கு பதில் அளிப்பதுடன், அந்த விபரங்களை சேர்த்து சமர்ப்பிக்குமாறு, மின் வாரியத்திற்கு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மனுக்களை இணையதளத்தில் வெளியிட்ட மின் வாரியம், ஒரு மாதத்திற்கு மேல் கருத்து கேட்டு வந்தது.

இதற்கான அவகாசம் இம்மாதம், 24ம் தேதியுடன் முடிந்தது. தபால், இணையதளம், நேரடியாக என, மொத்தம் 4,500 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மின் வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. விநியோக முறைஅதில் இடம்பெற்றுள்ள விபரங்கள்: தமிழக மின் வாரியம், 'உதய்' திட்டத்தில் இணைந்தாலும், தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளது. இதன் வாயிலாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மத்திய அரசின் மின் துறை வழிகாட்டுதலின்படி, வினியோக முறையை வலுப்படுத்தும் திட்ட நிதியை பெற, மின் கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. கட்டண திருத்தம் செய்யப்படா விட்டால், மின் வாரியத்திற்கு, 10 ஆயிரத்து 793 கோடி ரூபாய்க்கான மானியங்கள் வழங்கப்படாது. எனவே, மின் கட்டணத்தை, எட்டு ஆண்டு இடைவெளிக்கு பின் உயர்த்துவதை தவிர, வேறு வழியில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்: இனி எல்லாமே கட்!

கஞ்சா ஏஜென்டாகும் பள்ளி மாணவர்கள்: திடுக்கிடும் தகவல்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)