News

Saturday, 14 January 2023 10:22 PM , by: Elavarse Sivakumar

பிரதமரின் பீமா யோஜனா திட்டத்திற்கு  ரூ.540 கோடி ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.  இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

காப்பீடு

பொதுவாக விவசாயிகள் அரும்பாடுபட்டு சாகுபடி செய்த விளைபொருட்கள், எதிர்பாராதவிதமாக,  புயல், மழை, வெள்ளம்,  போன்ற இயற்கைச்  சீற்றங்களில் சிக்கி பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

இழப்பீடு திட்டம்

இந்த நஷ்டத்தால், விவசாயிகளுக்கு  நிதிச்சுமை ஏற்படுவதால், இதனைத் தடுக்க ஏதுவாக,  பிரதமரின் பீமா யோஜனா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரு.540 கோடி

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ், பயிர் இழப்பீடாக  ரூ.540 கோடியை விடுவிக்கும் பணிகளை வேகப்படுத்துமாறு, காப்பீடு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரூ.311 கோடி

இதில் 311 கோடி ரூபாய், விடுவிக்கப்பட்டதாக வேளாண் காப்பீடு நிறுவனமான (ஏஐசி) தெரிவித்துள்ளது. இதில் பெரும்பகுதி தொகை ராஜஸ்தானின்  பார்மர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கானது என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக காரீஃப்  பருவ சாகுபடிக்காக இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட 3வயது குழந்தை - அமெரிக்காவில் கொடூரம்!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)