
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்ப்பட்ட பணத்தை விவசாயி அல்லாதோர் பெற்று நடைபெற்ற முறைகேட்டில், அத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.எம் கிசான் திட்டம்
விவசாயிகளுக்கு உதவும் வகையில், பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை, ஆண்டுக்கு 3 தவணை வீதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் 6வது தவணை விவசாயிகளின் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.
இந்த நிதி மேலாண்மையைக் கையாண்டு விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பி.எம் கிசான் திட்டத்தில் தனி நபர்கள்
இந்நிலையில், பி எம். கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபர்கள் நிதியை பெறும் வகையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மற்ற ஊழியர்கள் பணியிடமாற்றம் செய்ய தமிழக அரசின் வேளாண்மை துறையின் இயக்குனர் கடந்த மாதம் செப்டம்பர் 24 ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
பணியிடமாற்றத்திற்கு இடைக்காலத் தடை
இந்த உத்தரவுக்கு தடை கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை.விசாரித்த நீதிபதி பார்த்திபன், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், வழக்கு தொடர்பாக வேளாண் துறையின் முதன்மை செயலாளர், வேளாண்துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் படிக்க...
குறைந்த வாடகையில் விவசாய இயந்திரங்கள் - சூப்பரான திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்
PM Kisan Update : ரூ.2000 பணம் உங்களுக்கு வந்துவிட்டதா? இல்லையா? உடனடியாக சரிபாருங்கள்!
அதிக மகசூல் அள்ளித்தரும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை! - விவசாயிகள் ஆர்வம்!