முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் இலச்சினையை அறிமுகம் செய்து வைத்து, இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
கல்வி எனும் பேராயுதத்தைக் கொடுத்து, ஏழை - எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக உள்ள நமது அரசுப் பள்ளிகளைக் காத்திட 'நம்ம பள்ளி பவுண்டேசன்' தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக கல்வி துறையில் மாற்றங்களை ஏற்படுத்திய க.அன்பழகனின் பிறந்த நாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அனைத்தையும் அரசால் செய்து விட முடியாது. மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர், நாம் உயர்வதற்கு காரணமாக இருந்த பள்ளியை நாம் உயர்த்துவதற்காக தான் இந்த திட்டம் தொடங்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் படிக்க: