இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 February, 2021 8:55 AM IST
Credit : Hindu Tamil

அழுத்தம் ஊட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட நாட்டின் முதல் டீசல் டிராக்டரை (Diesel Tractor) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) இன்று அறிமுகப்படுத்த இருக்கிறார். விவசாயிகளின் வருமானத்தை (Farmers Income) உயர்த்தும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த டீசல் டிராக்டரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த டிராக்டரைப் பயன்படுத்தினால், விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 1 இலட்சம் வரை மிச்சமாகும்.

விவசாயிகளின் வருமானம் உயரும்

ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் (Rawmat Techno Solutions) மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா (Tomaceto Ackl India) ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த மாற்றம், செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை (Income) உயர்த்த உதவுவதோடு, ஊரக இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் (employment) அதிகரிக்கும். மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar), பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

1 இலட்சம் சேமிப்பு:

டீசல் டிராக்டரை (Diesel Tractor) பயன்படுத்துவதன் மூலம், வருடத்திற்கு ரூ ‌1 லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளால் சேமிக்க முடியும் என்பதால், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். இந்த டிராக்டர் நடைமுறைக்கு வந்த பின்பு, விவசாய வேலைகள் கால் தாமதமின்றி மிக எளிதில் முடியும். இந்த டிராக்டர் அனைத்து விவசாயிகளுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு கடனுதவி! பயனாளர்களுக்கு அழைப்பு!

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வந்துவிட்டது பறக்கும் விமான கருவி

English Summary: The country's first CNG tractor launches today! Farmers are left with Rs 1 lakh a year
Published on: 12 February 2021, 08:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now