மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 December, 2020 11:30 AM IST
Credit: Tamil News

புயல் எதிரொலியாக கனமழை பெய்யும் என்பதால் தென் மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை உடனே காப்பீடு செய்யவேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் (Burevi cyclone) இன்று திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே கரையை கடந்து பின் புரெவி புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை குமரி-பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையை கடக்கும்.

இதன் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே விவசாயிகள் தங்களின் பயிர்களை உடனே காப்பீடு செய்யவேண்டும் என்று வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உடனே காப்பீடு செய்யுங்கள்

இது குறித்து வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகில் உலா பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணத்தைச் செலுத்தி சகாயபடி செய்ததற்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து, புயல் பாதிப்பிலிருந்து பயிர்களை காத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி மற்றும் இஞ்சி போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்வதற்காக கடைசி தேதி டிசம்பர் 15 ஆம் தேதி ஆகும் எனினும் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னரே விவசாயில்க பயிர்க்காப்பீடு செய்துகொள்ள வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

பயிர்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

  • மேலும், வாழை, மரவள்ளி, பப்பாளி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க, பக்கவாட்டுக் கிளைகள், இலைகளை அகற்ற வேண்டும்.

  • கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் உடனடியாக மா மரங்களில் அறுவடை செய்ய வேண்டும். மாந்தோப்புகளுக்கு 2 நாட்களுக்கு முன்பும், தென்னந்தோப்புகளுக்கு 4 நாட்களுக்கு முன்பும் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.

  • வயல்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க...

நிவர் புயல் தாக்குதலால் நீரில் முழ்கிய 9,400 ஹெக்டேர் பயிர்கள் - மீட்கும் முயற்சியில் அதிகாரிகள்!!

நாளை வங்கக்கடலில் உருவாகிறது புயல் - தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

”தமிழக மீன்’’ அங்கீகாரம் பெறும் "அயிரை மீன்” !!

 

English Summary: The Department of Agriculture has advised farmers in the southern district to immediately insure their agricultural and horticultural crops as heavy rains expects for next 3 days due to burevi cyclone
Published on: 02 December 2020, 11:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now