மதுரை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து வரும் 15ம் தேதி முதல் துவரை கிலோ ரூ.60 வீதம் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்துள்ள துவரையை கிலோ ரூ60க்கு கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருமங்கலம், வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் டிசம்பர் 15 முதல் மார்ச் 14ம் தேதி வரை துவரை கொள்முதல் செய்யப்படும்.
எனவே துவரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் நிலத் திற்கான சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளளாம்.
முன்பதிவு செய்த விவசாயிகளிடம் இருந்து மட்டுமே துவரை கொள்முதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்படுகிறது. துவரையின் ஈரப் பதம், இதர பொருள்கள் மற்றும் தானியங்கள் கலப்பு, சேத மடைந்த பயறு, சுருங்கிய பயறு, வண்டு தாக்கிய பயறு ஆகிய வற்றை தரப் பரிசோதனை செய்து கொள்முதலுக்கு அனுப்பப்படும். கொள்முதல் செய்யப்பட்ட பயறுக்கான தொகை, விவசாயி களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, திருமங்கலம் 81100 54595. உசிலம்பட்டி - 70102 80754, வாடிப்பட்டி - 96008 02823 ஆகிய எண்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வட்டார வேளாண்மை விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!
விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் ஈட்டலாம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!