News

Thursday, 02 February 2023 09:27 PM , by: Elavarse Sivakumar

பட்ஜெட்டில் விதிக்கப்ப்டட  வரி காரணமாக, ஒரு சவரன் தற்போது 44 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதனால் இல்லத்தரசிகளும்,  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.600 வரை உயர்ந்தது

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு சவரனுக்கு 600 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு சவரன் 43320 ரூபாயாக இருந்தது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரூ.720

 இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் வரை உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 44000-ஐ தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிற்பகல் நிலவரப்படி சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாகவும், ஒரு சவரன் 44 ஆயிரத்து 40 ரூபாயாகவும் விற்பனை ஆனது.

வெள்ளி

இதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  கிராமுக்கு 1 ரூபாய் 80 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய 80 காசுகளாக இருந்தது. பார் வெள்ளி (ஒரு கிலோ), ரூ.77800 ஆக இருந்தது.

மேலும் படிக்க...

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)