பேறு காலம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய மருமகள் மற்றும் பேத்தி க்ருஷிகாவை அவர்களின் வீட்டில் இருந்தே ஹெலிகாப்டரில் அழைத்து வர முடிவு செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த பலேவாடி பகுதியை சேர்ந்த விவசாயி அஜித் பாண்டுரங் பல்வாட்கர் தனது குடும்பத்தில் புதிதாக இணைந்து இருக்கும் பேத்தியை வீட்டிற்கு அழைத்து வர ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த சம்பவம் வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பேத்தி க்ருஷிக்காவை தனது வீட்டிற்கு அழைத்து வருவதை அடுத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் அஜித் பாண்டுரங் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளார். பிரசவத்திற்கு பின் தாய் வீட்டில் இருந்த வந்த நிலையில், பேறு காலம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய மருமகள் மற்றும் பேத்தி க்ருஷிகாவை அவர்களின் வீட்டில் இருந்தே ஹெலிகாப்டரில் அழைத்து வர முடிவு செய்தார்.
ஹெலிகாப்டரில் வந்த பேத்தி:
அதன்படி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தார். மருமகளின் தாய் வீடு அமைந்துள்ள ஷெவால் வாடி பகுதியில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு பேத்தி க்ருஷிக்கா மற்றும் மருமகளை அஜித் பாண்டுரங் ஹெலிகாப்டரிலேயே அழைத்து வந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக இதே போன்று, பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் தந்தை ஒருவர் ஹெலிகாப்டரில் தனது மகளை வந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவமும் மகாராஷ்டிரா மாநிலத்திலேயே அரங்கேறியது. மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷெல்கோவோன் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் ஜரேகர் தனக்கு பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தார். இவரது குடும்பத்தில் பெண் குழந்தையே இல்லை என்ற ஏக்கம் குடும்பத்தினருக்கு இருந்து வந்துள்ளது.
பெண் குழந்தையை வரவேற்ற தந்தை:
இந்த நிலையில், தான் விஷாலின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் சேர்ந்து, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், சொந்த வீட்டிற்கு ஹெலிகாப்டரில் அழைத்து வர முடிவு செய்தனர். சமீப காலங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஹெலிகாப்டரை பயன்படுத்தும் வழக்கம் இந்தியாவில் அதிகரித்து உள்ளது.
குழந்தை மட்டுமின்றி, திருமணத்திற்கு வரும் போதும் மணமகள் ஹெலிகாப்டரில் வரும் சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. வான் வழியே அதிகம் பரீட்சயம் இல்லாத வாகனத்தில் வருவது உள்ளபடியே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, சமீபத்திய டிரெண்ட் ஆகவும் மாறி விட்டது.
மேலும் படிக்க
TN Weather: 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு!