News

Saturday, 30 April 2022 09:42 AM , by: Dinesh Kumar

The first solar eclipse in 2022.....

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் கடைசி நாளில் நிகழ உள்ளது. இந்த நிலையில் சூரிய கிரகணம் குறித்த செய்திகளை இப்பகுதியில் பார்க்கலாம்.

நாசா விண்வெளி ஆய்வு மையமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. சிலி, அர்ஜென்டினா, உருகுவே, மேற்கு பராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு மற்றும் தென்மேற்கு பிரேசிலின் ஒரு சிறிய பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படும் என நாசா கணித்துள்ளது.

பகுதி கிரகணம் 4 மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், ஐஎஸ்டி நேரப்படி சனிக்கிழமை மதியம் 12.15 மணி முதல் 2.11 மணி வரை கிரகணம் தெரியும்.

அண்டார்டிகாவின் சில பகுதிகளிலும், தென் அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரையிலும், பால்க்லாந்து தீவுகளிலும், தெற்கு பசிபிக் மற்றும் தெற்கு கடல்களிலும் கிரகணம் தென்படும் என்று தெரிகிறது.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் கடந்து செல்வதைத் தான் சூரிய கிரகணம் எனக் குறிப்பிடுகின்றனர். சூரிய கிரகணம் ஒரு பகுதி மட்டுமே என்பதால், பூமியிலிருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே சந்திரன் மறைக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த கிரகணத்தின் போது சந்திரன் சூரியனின் 65 சதவீதத்தை மறைக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

நாம் எப்படி பார்க்கிறோம்?

இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியாது என்றாலும், இயற்கையின் அதிசயங்களில் மூழ்கியவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இந்த கிரகணத்தை நாம் எங்கிருந்தாலும் ஸ்மார்ட்போன் மூலம் கூடப் பார்க்கலாம்.

Timeanddate.com என்ற இணையதளம் சூரிய கிரகண நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தில் சூரிய கிரகணத்தை அருகில் இருந்து பார்க்கும் வசதி உள்ளது.

அமாவாசை நாளில் சூரிய கிரகணம்:

இன்று அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். அமாவாசை தினத்தில் நடைபெற உள்ளது. அதேபோல, மே 16ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. ஆனால், அதுவும் இந்தியாவில் தெரிய வராது என்று ஆராச்சியில் தெரிகிறது.

அடுத்த கட்டமாக அக்டோபர் 25-ம் தேதி பகுதி சூரிய கிரகணமும், நவம்பர் 8-ம் தேதி முழு சூரிய கிரகணமும் நிகழும். அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணத்தை மாலையில் சூரியன் மறையும் போது இந்திய மக்கள் சிறிது நேரம் பார்க்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க:

இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்! இரத்த நிறத்தில் நிலா!

கொரோனா பாதிப்பு: வருமானவரி தாக்கல் செய்ய அவகாசம் செப்.30 வரை நீட்டிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)