உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
டி.ஏ.பி. உரங்களுக்கான மானியத்தை ரூ.1,650 லிருந்து ரூ.2,501-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.512 ஆக இருந்த டி.ஏ.பி. உர மானியம், 2021-22-ல் ரூ.1,650 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2,501-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுபோன்று, ஜம்மு காஷ்மீரில் ரூ.4,526 கோடியில் 540 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், நக்சல் பாதிப்புள்ள இடங்களில் 2ஜி சேவையில் இருந்து 4 சேவை வழங்க ரூ.1,840 கோடியில் கட்டமைப்பு ஏற்படுத்தவும், தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் “பிரதான் மந்திரி சவான் நிதித் திட்டம் மூலம் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் தொழிலை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை கடன் உதவி பெற இந்த திட்டம் வகை செய்யும்.
யூரியா உள்பட மானிய உரங்கள் கையிருப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022 ஆம் மாத பயன்பாட்டிற்கு 54,800 மெ.டன் யூரியா, 26,000 மெ. டன் டிஏபி, 15,000 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 46,150 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், டிஏபி உரத்தேவையினை ஈடுசெய்திட கிரிப்கோ நிறுவனம் இம்மாத இறுதிக்குள் கூடுதலாக 10,000 மெ. டன் டிஏபி உரத்தினை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வழங்கிட இசைவு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க