News

Friday, 05 August 2022 05:47 AM , by: R. Balakrishnan

Ration Card

ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், ரேஷன் கார்டில் அப்டேட் செய்யவும் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு என்பது மிகவும் அத்தியாவசியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு மூலமாக ரேஷன் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பயன்பெறுகின்றனர். நிதியுதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன.

ரேஷன் கார்டு (Ration Card)

நிறையப் பேருக்கு ரேஷன் கார்டில் பிரச்சினை ஏற்படுகிறது. அதில் ஏதேனும் அப்டேட் செய்யவேண்டிய சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது என்று பலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள். ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்கள் அமைப்பும் (சுவிதா) உணவு மற்றும் பொது விநியோகத் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

பொதுச் சேவை மையங்கள் (General Service Centers)

இதன்படி, நாடு முழுவதும் சுமார் 3.70 லட்சம் பொதுச் சேவை மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரேஷன் கார்டு தொடர்பான சேவையை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வாயிலாக சுமார் 23.64 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டில் உள்ள பிரச்சினைகளுக்கு பொதுச் சேவை மையங்களில் எளிதாகத் தீர்வுகாணலாம்.

ஆதார் இணைப்பும் இங்கே மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது. ரேஷன் கார்டுக்கான டூப்ளிகேட் பெறுவது போன்ற பல்வேறு வகையான சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறமுடியும். என்னென்ன ரேஷன் பொருட்கள் கிடைக்கும் போன்ற விவரங்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் படிக்க

EPFO: இணையத்தில் கசிந்த தகவல்கள்: பென்சனர்கள் அதிர்ச்சி!

ஓய்வூதியம் வாங்குவோர் இதை செய்யக்கூடாது: வெளியானது திடீர் உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)