News

Wednesday, 20 January 2021 09:20 PM , by: KJ Staff

Credit : Patrikai

வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் 1 வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தது. ஆனால், அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைப்பு:

விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை (Agricultural Laws) முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாகவும், ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar) யோசனை தெரிவித்துள்ளார்.

10ஆம் கட்ட பேச்சுவார்த்தை:

10-ம் கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவது குறித்து விவசாயிகள் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என மந்திரி தோமர் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மந்திரியின் யோசனை குறித்து விவசாயிகள் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மதுரையில் வரப்போகிறது மல்லிகை பூ ஏற்றுமதி மையம்! மத்திய அரசு ஒப்புதல்!

விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் திணறும் விவசாயிகளுக்கு, வேளாண் துறையின் ஆலோசனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)